பிந்து (விந்து) வீரியம் இருக்கின்றது இதை வெளிப்படுத்தும் பொழுது
சுகம் ஏற்படுகின்றது. உடல், புலன், மனம், பிணைந்து சுகம் ஏற்படுகின்றது.
இதனின் இயற்கை முறையான உபயோகம், இகத்திலிருப்பவர்க்கு,
இல்லற வாழ்வுக்கு அவசியமென்றே கூறுவோம். இயற்கை அனுபதிக்கப்பட்ட சுக
உணர்ச்சிகளில் இதுவும் ஒன்று இயற்கை வளர்ச்சிக்கு இயற்கை தூண்டும்.
மறுக்க மிக்க கடினமான சுகங்களில் சுக உணர்ச்சிகளில் இதுவும் ஒன்று. தர்ம
விரோதமின்றி ஆண், பெண் சேர்க்கையால் உடல் நிலை, காலதேச
வர்த்தமானத்திற்குகந்தவாறும், மக்கட்பேறுக்கென்றும் முடிவில் இதை
புறக்கணிக்க, மறக்கவேண்டுமென்ற கருத்தைக் கொண்டும் மிதத்தில் மிதமாகப்
பிந்துவைச் செலவழித்தலால் ஏற்படுவதே இச்சுகம் இவ்வாறு அனுபவித்தலால்
அதிகமாகி பிந்துவே செலவழிந்த, ஆண், பெண் இரசங்கள் கூடுதலாலும் ஏற்படும்
நன்னிலை உண்டாகி, நீடூழி கால வாழ்வும், அனுபவமும் சித்திக்கின்றது.
ஆனால் தர்மம், இயற்கை முறைக்கு விரோதமாக வரம்பற்று, பிந்துவை
செலவழித்தலால் ஏற்படும் கணச்சுகம், பொய் சுகம் என்பதை அடிக்கடி விரும்பி,
அடைந்து, முடிவில் பிறராலா, நம்மாலா? பிந்துவைக் கையாலும், அமித
சேர்க்கையாலும் இழந்து, பின் மணந்தும், மனம் புழுங்கி, தானும் கெட்டு, பிறரையும்
கெடுத்து உடழுகி, வாழும் நடைப்பிணங்கள் பதில் கூறட்டும்!