சுக்கிரனுடன், செவ்வாய் இணைந்திருந்தால் விரும்பியவரை மணக்க விரும்புவர்,
எவர் தடுக்கினும் கேளாது விவாகம் செய்து கொள்வர்.
இணைந்து 7ல் நின்றுவிடில் இரண்டாம் தாராமாகவும் ஏற்பட வாய்ப்பு உண்டு.
சுக்ரன் மனைவிக்கு எங்கு நிற்கிறதோ அதற்கு ஐந்து வீட்டுக்குள் கணவனுக்கு நின்றால்,
ஒரே பலம் கொண்டதாக இருக்கும், அன்புடன் ஆனந்த வாழ்வு அமையும்.