சுக்ரன் துலாத்தில் உள்ளவர்கள் தோற்றப்பொலிவு இருக்கும், அறிவாற்றல் இருக்கும், எதிர்ப்பை சமாளிப்பார்கள், செல்வம், நிறைய பெறுவார்கள்.
சுக்ரன் 4ல் இருந்தால் சிறு பிராயம் முதலே தாய்மீது பாசம் அதிகம் இருக்கும். தாய் நலனில் கவனம் செலுத்துவார், அறிவிலும், அந்தஸ்திலும் உயர்ந்தவராய் விளங்குவார்.
சுக்ரன் விருச்சிக லக்னகாரர்களுக்கு 7மிடத்ததிபதியாக, களத்திரகாரகனாக ஆகிறார், காதல் திருமணத்தையும், சனி, ராகு கலப்பு திருமணத்தையும், தேய்பிறைச்சந்திரன் குறையுள்ள களத்திரத்தையும் தருவார்.
