சுக்கிரன் எந்த லக்னத்தில் பிறந்தாருக்கும்
லக்னத்தோடு இருப்பின் அழகிய தோற்றத்தோடும்,
இனிமையை நாடும் குணமுள்ளவராக இருப்பர்.
சுக்ரன் கேந்திரமான 1,4,7,10ல் நின்று உச்சம், ஆட்சியில் இருப்பின்
சங்கீதம், நாட்டியம், நாடக துறையில் நாட்டம் ஏற்படும்.
செழிப்போடும் வாழ்வர். சொகுசான வீடு, சுகமான வாழ்வு அமையும்.