நாம் சிறிது சிந்தித்து பார்த்தால் இந்த பூமியின் தற்போதய மக்கள் தொகை சற்றேற குறைய 750 கோடி
இத்தனை மக்களும் நாம் வரையறத்துள்ள நியதிபடி பல்வேறு நாடுகளில்,
பல்வேறு சீதோஷண நிலைகளில் வாழ்ந்து கொண்டுதானே இருக்கின்றனர்
சிலர் அறிவாளிகள், பலர் அப்படியில்லை சிலர் பெரும் செல்வந்தர்கள், பலர் அப்படியில்லை சிலர் கறுத்தவர்
சிலர் பழுப்பு நிறகண்களை உடையவர், சிலர் கறுத்தவர் , சிலர் சுருள், சுருளான தலை முடிஉடையவர்,
சிலர் இறை நம்பிக்கை உடையவர், பலர் அப்படியில்லை,
சிலர் ஆயுள் முழுவதும் விருந்து கேளிக்கையென்ற இருப்பவர்கள் பலர் அப்படி இல்லை
ஒரு வேளை உணவு கூட சிலருக்கு அரிதாகவே கிட்டுகிறது.
இத்தனை நிலையிலும் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அதன் பொருள் என்ன ஒன்றே ஒன்றதான்
அவர் அவர்களின் தளத்தில் அவர்அவர்கள் ஏதோ ஒரு வகையில் இன்பத்தோடு இருக்கிறார்கள்
அல்லது இன்பத்தை எதிர் நோக்கி காத்துக் கொண்டு இருக்கிறார்கள்
அதனால் நாம் பெரிதாக நம்முடைய நிலையை கண்டு அஞ்ச வேண்டியது இல்லை