எந்த ஒரு கவலை அது யாருக்கு வந்தாலும் எதன் மூலம் வந்தாலும்
அந்த கவலைக்கு காரணமான விஷயத்தில் இருந்து மனதை மடை மாற்றம் செய்வதுதான்
கவலையில் இருந்து தப்பிக்க உள்ள ஒரே வழி
அப்படி மடை மாற்றம் செய்வது நமது உள்ளார்ந்த சக்தியினை பெருக்குவதற்க்கு
அனுகூலமான விஷயங்களில் மடைமாற்றம் செய்யப்பட வேண்டும்
அது இல்லாமல் நமது உள்ளார்ந்த சக்தியினை குறைப்பதற்க்கு உண்டான விஷயங்களில்
மடை மாற்றம் செய்தால் நாம் கவலை எனும் புதை சேற்றில் மூழ்கி மறைந்துவிடுவோம்.