காலத்தின் ஓட்டத்தில் பருவங்கள் மாறுவது போல மனிதனின் வாழ்க்கை பயணத்திலும்
சூழ்நிலைகள் அறிவு, அனுபவம் காரணமாக பல பருவங்களை மனிதன் கடக்கின்றான்.
ஒவ்வொரு பருவத்திலும் விருப்பு, வெறுப்புகள் ஆசை, நிராசைகள் மாறிக்கொண்டேயிருப்பதை நாம் காணலாம்
இதிலிருந்து, நாம் புரிந்து கொள்ளவேண்டியது
மாறுதல் நிலையானது அந்த மாறுதலில் நமக்கு பிடித்த மாறுதலை உருவாக்க உண்டான யுக்தியே
நான் முன்னமே சொன்ன கற்பனா சக்தி,
இந்த கற்பனா சக்தியின் துணையை சரியானபடி புரிந்து அதை செயல்படுத்தும் வழி வகைகளையும்
நன்கு அறிந்து கொண்டு நாம் செயல்படுத்தினால்
நாம் விரும்பும் மாறுதல்களை பருவத்திற்க்கு தக்கபடி செயல்படுத்தலாம்
அப்படி செய்யும் போது வாழ்க்கை பயணம் சுகமாயும் ஆனந்தமாயும் இருக்கும்
இந்த கற்பனா சக்தியின் ஜீவ நாடியை நாம் செயல்படுத்த அறிந்து கொண்டால்
நாம் நினைக்கும் மாறுதல்கள் நம்மை அடைந்தே தீரும்.