அந்த நல்ல குணங்களை மேலும், மேலும் வளர்த்துங்கள்
அது உங்களுக்கு நீங்கள் செய்யும் செயலில் விருப்பையும் சந்தோஷத்தையும் தரும்
அது மட்டுமல்ல
உங்களுடைய தன்னம்பிக்கையின் அளவும் அதிகரிக்கும்.
அந்த நல்ல குணங்களை பட்டியல் இட்டால்
நேரந்தவறாமை, பிறருக்கு உதவிசெய்தல், செய்யும் பணிகளில் நேர்த்தி,
சுறுசுறுப்பு பல விஷயங்களை கற்றுக்கொள்ளும் ஆர்வம்,
கற்றதை செயல்படுத்துவதில் உள்ள முனைப்பு
இனிமையான பேச்சு
இப்படி
எத்தனையோ நல்ல குணங்கள்
ஒளிந்திருப்பதை அறியலாம்