ஒரு விதத்தில் பார்த்தால் மனிதன் மிக பலவீன மனம் படைத்தவனாகவே இருக்கிறான்.
காரணம் ஆழமாக சிந்தித்து அதன் மூலம் பணி செய்து கிடைக்கும் பயன்களை அவன் விரும்புவதில்லை
எதையும் சுலபாக அடைய வேண்டும் என்பதே அவனது ஆசையாய் இருக்கிறது.
உழைக்காமலும் உயர்ந்த சிந்தனை இல்லாமலும் மன உறுதியும், வைராக்கியத் தோடும் கூடிய காரியங்கள் இல்லாமலும்
எப்படி நினைத்ததை அடைய முடியும்.
மனிதன் பொருளாதாரத்தில் லாபம் தரக்கூடிய,
புலன்களால் அனுபவிக்க கூடிய விஷயங்களை மட்டுமே நம்புகிறான்.
அதனாலேயே அவன் பலவீன மனதுடையவனாக இருக்கிறான் என்பதை
அறியவோ உணரவோ இல்லை
முன் காலத்தில் விரதம் பிரம்மசாரியம் போன்றவைகளால் உண்டான பலன் என்னவென்றால்
மன வைராக்கியம் மன உறுதி போன்றவையே
மன உறுதியும், மன கட்டுப்பாடும் மனவைராக்கியம் அடைய அவைகள் உதவி செய்தன
அதன் மூலம் அவர்கள்
தனக்கும்
தன் சமூகத்திற்க்கும்
இருக்கும் காலம் வரை பயன்பட்டார்கள்.