Skip to content
சிவபெருமானை வழிபடும் முக்கியமான வழிபாடுகளில் ஒன்று
சிவராத்திரி ஆகும். மாதம் தோறும் வளர்பிறை மற்றும்
தேய்பிறை சதுர்த்தசியில் சிவராத்திரி வரும். மாசி மாத தேய்பிறை
சதுர்த்தசியில் வரும் சிவராத்திரியே மகா சிவராத்திரி என்று
அழைக்கப்படுகிறது.
‘நித்ய சிவராத்திரி, யோக சிவராத்திரி, பட்ஷ சிவராத்திரி, மாத சிவராத்திரி,
மகா சிவராத்திரி’ என சிவராத்திரி ஐந்து வகையாக வருகின்றன.
நித்ய சிவராத்திரி — ஒரு வருடத்தில் தேய்பிறை சதுர்த்தசியில் 12, மற்றும்
வளர்பிறை சதுர்த்தசியில் 12 என 24 சிவராத்திரிகள் தான் நித்ய
சிவராத்திரி என அழைக்கப்படுகிறது.
யோக சிவராத்திரி – திங்கட்கிழமையில் வரும் சிவராத்திரி ‘யோக
சிவராத்திரி’ என்று அழைப்பார்கள். இதில் நான்கு வகை உள்ளன. 1)
திங்கள் கிழமை பகல், இரவு முழுமைக்கும் அமாவாசையாக இருக்கும். 2)
திங்கட்கிழமை சூரிய அஸ்தமனம் முதல் 4 ஜாமும் (மாலை 6 மணி முதல்
காலை 6 மணி வரை) தேய்பிறை சதுர்த்தசி இருக்கும். 3) திங்கட்கிழமை
நான்காம் ஜாமத்தில் (நள்ளிரவு 3 மணி முதல் காலை 6 மணி வரை) அரை
நாழிகையாவது அமாவாசை இருப்பது , 4) திங்கட்கிழமை அன்று இரவு
நான்காம் ஜாமத்தில் தேய்பிறை சதுர்த்தசி அரை நாழிகையாவது
இருப்பது என இவை அனைத்தும் ‘யோக சிவராத்திரி’யில் வரும்.
பட்ஷ சிவராத்திரி – தை மாதத்தில் வரும் தேய்பிறை பிரதமை திதியில்
தொடங்கி, 14வது நாளான சதுர்த்தசி வரை கடைபிடிப்பது ‘பட்ஷ
சிவராத்திரி’ ஆகும். பிரதமை முதல் 13 நாட்கள் வரை ஒரு வேளை மட்டும்
உணவருந்தியும், 14வது நாளான சதுர்த்தசியில் முழு வேளை
உணவருந்தாமலும் உபவாசம் இருப்பது ‘பட்ஷ சிவராத்திரி’ எனப்படும்.
மாத சிவராத்திரி – மாதம் தோறும் அமாவாசை தினத்திற்கு முன்தினம்
வரும் சதுர்த்தசி திதியில் வருவது மாத சிவராத்திரி ஆகும்.
மகா சிவராத்திரி – மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி அன்று வருவது ‘மகா
சிவராத்திரி’ ஆகும். அன்றைய தினம் விரதம் இருப்பவர்கள் முக்தியை
அடைவார்கள் என்பது இதன் பலனாகும்.
இந்த ஐந்து வகை சிவராத்திரியில் ஏதாவது ஒன்றை கடைபிடித்தாலே,
கோரிய நன்மைகள் கிடைக்கும்.
Go to Top
Om nama shivaya namah Om // shivaya namah Om //