Skip to content
சிரசாசனம் — SIRASASANAM
You are here:
- Home
- யோகா
- சிரசாசனம் — SIRASASANAM
சிரசாசனம்
15 நாட்கள் அர்த்த சிரசாசனம் செய்த பின்புதான் சிரசானம் தொடங்க வேண்டும்.
அர்த்த சிரசாசன நிலையில் சுவர் ஒரமாகவோ,
மூலையிலோ இருந்து கொண்டு
இலேசாக மூச்சுசப் பிடித்து கால்கள் இரண்டையும் உயரே மெதுவாகத் தூக்க வேண்டும்.
கால்களை விறைப்பாக இல்லாமல் சாதாரண நிலையில் வைக்க வேண்டும்.
சாதாரண மூச்சு.
கண் மூடி இருக்க வேண்டும்.
ஆரம்ப காலத்தில் பிறர் உதவியுடன் செய்யலாம்.
நன்றாக பேலன்ஸ் கிடைத்தபின் தனியாக நிற்கலாம்.
ஆரம்பத்தில் 3 நிமிடம் முதல் 5 நிமிடத்திற்குக மேல் நிற்க வேண்டாம்.
இறங்கும்போது இரண்டு கால்களையும் மெதுவாக மடித்து இறங்க வேண்டும்
அல்லது ஒரு காலை மட்டும் நேராக நீட்டி
மறுகாலை எதிர்ப்பக்க பாகமாக வைத்து மிக மெதுவாக இறங்க வேண்டும்.
மண்டியிட்டு உட்கார்ந்து நன்றாக இரு மூக்குத் துவாரம் வழியாக
மூச்சு வாங்கி பின் கண்ணை மெதுவாகத் திறக்க வேண்டும்.
பலன்கள் —
ஆசனங்களின் அரசன்
உடலில் உள்ள சுரப்பிக்ள் அனைத்தும் உறுதிப்பட்டு
பலநோய்கள் வராமல் காக்கும்.
சிந்தனை சக்தி, ஞாபக சக்தி அதிகரிக்கும்.
நோயுறாது நன்கு செய ல்படும்.
ஆண்மைமேலிடும்.
மலச்சிக்கல்,
வெள்ளெழுத்து,
நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
மூளையை உபயோகித்து வேலை செய்யும் அரசு அதிகாரிகள்
தலைவர்கள், வக்கீல்கள்,
டாக்டர்கள், மாணவர்கள்,
சிந்தனையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள்
பழக வேண்டிய முக்கிய ஆசனம்.
எந்த நோயையும் தடுக்கும் சக்தி இதற்கு உண்டு.
பிட்யூட்டரி, பினியல்பாடி கோளங்கள் நன்கு இயங்கும்.
சுத்த ரத்தம் உடம்பிலுள்ள நாளங்களுக்குப் பாய்ச்சப்பட்டு
சுகவாழ்வு, ஆரோக்கியம் மேலிடும்.
முகம் பொலிவு பெறும்.
மூளைக்கோளாறு நீங்கும்.
ருதுவாகாத பெண்கள் ருதுவாவர்.
இவ்வாசனம் தினம் 2 நிமிடம் செய்தாலும் நல்ல பலன்.
ஆசன நிலையில் உடல் மிக இளக்கமாக இருக்க வேண்டும்.
Go to Top