உங்கள் இஷ்ட தெய்வம் எதுவாகவும் இருக்கலாம்.
அதன் பெயரை ஆக்ஞா சக்கரம் திறக்கப்பட்டபின்
அழுந்தச் சொல்லுவது மூல மந்திரம் எனப்படும்.
இந்த இஷ்ட தெய்வம் அடிமனதிற்கு எட்டக் கூடிய
சூக்கும சரீரத்தில் குடி கொண்டிருக்கும்.
மனோசக்தி பயிற்சி பெற்றவர்களிடமிருந்து சக்திக் கனல் எழுந்து பெருகி வரும்.
இவர்களுக்கு,
சூட்சுமமமான அடி மனத்தொடர்பு சாதாரணமாக உண்டு.
அந்த அடிமனத் தொடர்பும், சக்திக் கனலும் சந்திக்கும் இடத்தில்
சர்வ சக்தி மயமான ஆற்றல் முழு உருவெடுத்து இறங்குகிறது.