வருட கணக்கில் போர் செய்து ஒரு சாம்ராஜ்ஜியத்தை வென்றுவிடலாம்.
அணுவை பிளக்க செய்து மலையை தரைமட்டமாகிவிடலாம்
பிடிவாதத்தை மூலதனமாக்கி எட்டாத மலைகளிலும் ஏறிவிடலாம்.
அணையை கட்டி நதியின் பிரவாகத்தை கட்டுபடுத்திவிடலாம்
ஆனால்
பலவந்தமாய் ஒரு பூவை மலர செய்ய முடியாது.
அது இயற்கையால் தான் முடியும்.
இது எப்போது ஒருவருக்கு புரிகிறதோ
அப்போதே
புரிந்தவர் எல்லா விஷயங்களையும்
சரியான கோணத்தில் பார்க்க ஆரம்பித்து விடுவார்
அதுமட்டுமல்ல
தன்னை மீறிய சக்தி உண்டு
தன்னால் செய்ய முடியாத வேலைகளும் உண்டு
என்பதை உணர்ந்து கொள்வார்
அப்படி உணர்ந்த உடனேயே
அவர் தெளிவாகிவிடுவார்
தெளிவான அவரது மனம்
இயல்பாகவே
சாந்தமும்,அமைதியும் அடையும்