விரிப்பில் மல்லாந்து படுத்துக் கொண்டு கால்களைச் சேர்த்து வைத்துக் கொள்ளவும். கைகளைப் பக்கவாட்டில் நீட்டி படத்தில் காட்டியபடி அமைக்கவும். கண்ணை இலேசாக மூடிக்கொள்ளவும். உடல் பாதத்திலிருந்து மூட்டு, தொடை, இடுப்பு, வயிறு, மார்பு, கைகள், முகம் இவைகள் வரிசையாக இணைத்து இருக்க வேண்டும். சாதாரண மூச்சு. நாம் இறந்து போனால் எவ்வாறு உடல் இருக்குமோ அது போன்று உடலை இளக்கி சலனமின்றி 3 முதல் 5 நிமிடம் இருந்து, எழுந்திருக்கவும். ஆசனங்கள் செய்தபின் கடைசியாக சவாசனம் செய்யாமல் ஆசனத்தை முடிக்கக் கூடாது. இவ்வாசனத்தைக் கண்டிப்பாகச் செய்ய வேண்டும். பலன்கள் — உடல் களைப்பையும், மனச் சஞ்சலத்தையும் போக்கப் பயன்படுகிறது. தசைகள் புத்துணர்வு பெறும். ஆசனங்கள் செய்யும்போது சோர்வு ஏற்பட்டால் இடையிடையே சவாசனம் செய்யலாம். மனோசக்தி வளரும். உடல் நாடி நரம்புகள் நமது ஆளுகைக்கு வந்துவிடும். மனம் ஒருமைப்படுத்தப்படும். Category: யோகாBy admin@powerathmaFebruary 19, 20211 CommentTags: DIVINEPOWER AATHMAA .COMSAVASANAMசவாசனம்சாந்தியாசனம்மனோசக்தி Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 12NextNext post:ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 13Related Postsசுந்தர யோக சிகிச்சை முறை 128November 25, 2024சுந்தர யோக சிகிச்சை முறை 127November 24, 2024சுந்தர யோக சிகிச்சை முறை 126November 23, 2024சுந்தர யோக சிகிச்சை முறை 125November 22, 2024சுந்தர யோக சிகிச்சை முறை 124November 21, 2024சுந்தர யோக சிகிச்சை முறை 123September 30, 2024
Informative