சர்வாங்காசனம் –
விபரீத கரணியை கொஞ்ச நாள் செய்த பின்புதான் சர்வாங்காசனம் செய்ய முடியும்.
விபரீத கரணி நிலையில் இருந்து கொண்டு
இரு கைகளையும் மேலும் அழுத்தி நெஞ்சு நாடியில் தொடும்படி உடலை உயர்த்தி
கைகளை முதுகில் தாங்கி நிற்கும்படி ” L ” உருவில் நிற்கவும்.
சாதாரண மூச்சு நிலையில் கால்களின் பெருவிரல்களை
இரு கண்களையும் அரைகுறையாக மூடிய நிலையில் பார்க்கவும்.
கால்களை விறைப்பாக வைக்காமல் இளக்கமாக இருக்கும்படி நிற்கவேண்டும்.
2 நிமிடத்திற்கு ஒரு முறையாக, 3 முதல் 4 முறை செய்யலாம்.
பலன்கள்
உடலில் உள்ள அத்தனை அங்கங்களுக்கும் பலன் கிடைப்பதால் சர்வாங்காசனம் எனப் பெயரிடப்பட்டது.
முதுமையைக் போக்கும்.
தைராய்டு கிளாண்டு நன்கு வேலை செய்யும்.
ஞாபகசக்திக் குறைவு. தொந்தி, மமலச்சிக்கல்,
கல்லீரல் கேடு, கண் பார்வை மங்கல், நாடி மண்டல பலக்குறைவு நீங்குகும்.
பெண்கள் கர்ப்பப்பை நோய் வராமல் தடுக்கும்.
சுக்கிலம் பலப்படும்.
கெட்ட கனவுகள் நீக்கப்பட்டு நன்றாகத் தூக்கம் வரும்.
தைராய்டு பாராதைராய்டு முதலிய இடங்களில் தேங்கி நிற்கும்
இரத்ததை நாடி நரம்புகள் மூலம் மேலே ஏற்றி மறுபடியும் கீழே இறக்கும் சக்தி இவ்வாசனத்திற்கு உண்டு.
இதனால் இரத்த நாளங்களுக்கு சுத்த இரத்தம் கிடைத்து சுகவாழ்வு பெறும்.
Tried this asana today ayya
Will practice this continuously ayya
While doing it I can feel blood flow also ayya