சனி எவ்வளவு சுப பலம் பெற்றிருந்தாலும் அவருக்கே உரிய மந்தகதியால்
பலன்களை மெள்ள மெள்ளத்தான் கொடுப்பார். வேகம் அவரிடம் கிடையாது.
சனியும், சூரியனும் ஒன்றுகூடி இருந்தால் அறிவாளியாக, சுறுசுறுப்புடனும்,
அனுபவசாலியாகவும், உலோகங்கள் சம்பந்தப்பட்ட வேலைகளில் நிபுணராவார்.
சனியும், செவ்வாயும் ஒரே ராசியில் இருந்தால் யுத்தமும், சத்தமும் இல்லத்தில் அதிகரிக்கும்.
