சந்தோஷத்திற்கோ, துக்கத்திற்கோ புற காரணிகளைவிட
அடிப்படையானது அக காரணியான மனமே
அந்த மனதில் உண்டாகும் உணர்வுகளே
இன்ப துன்பங்களை உருவகித்து கொள்கிறது எனும் முடிவிற்கு
காரண காரியங்களோடு சிந்தித்து பார்த்தால் நம்மாள் வர முடிகிறது.
அப்படி அந்த முடிவிற்கு வந்த பின்
இன்ப துன்பத்தின் மூலம் மனம் என்று ஆன பின்
அதில் நாம் கவனம் செலுத்தி
அதை கையாள பழகிக் கொண்டால்
நம்மாள் இன்பத்தை மட்டுமே அடைய முடியும்
அதற்கு உண்டான விஷயங்கள்
எது, எது என்னென்ன என்பதை
நாம் நமக்குள் கலந்து அறிந்து கொள்வோம்.