இன்பம் அல்லது சந்தோஷம் என்பது என்ன எனும் வினா வந்தால்
மனித குலத்தின் பதில் ஒரே விதமாயும், ஒரே மாதிரியும் இல்லை என்பதே உண்மை.
ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்று இன்பம், சந்தோஷம் தருகிறது.
ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் ஒவ்வொன்று இன்பமாய் இருக்கிறது
படிப்பதில் ஒருவருக்கு இன்பம் என்றால்
படித்ததில் உள்ள விஷயத்தை ஆராய்ந்து செயல்படுத்தி பார்ப்பது
இன்னொருவருக்கு இன்பம்
படிக்காமலேயே இருப்பது இன்னுமொரு சாரருக்கு இன்பம், சந்தோஷம் தருகிறது.
இதை இப்படி பட்டியல் இட்டால் நீண்டுகொண்டே போகும்
இதிலிருந்து ஒன்று மட்டும் தெரிந்துகொள்ளலாம்
அது என்னவென்றால்
இன்பம் சந்தோஷம் போன்றவை மனதின் காரியங்கள் என்று .