சந்திரன் தனஸ்தானத்தில் இருந்தாலும், பார்த்தாலும் அந்த ஜாதகி ஏழ்மையானவள்.
சந்திரன் பெண்ணின் ஜாதகத்தில் 3,4,5,7,8,9,10ல் இருந்து
குரு பார்வை பெற்றால்
சகல மங்களங்களையும் பெற்று சுபிட்சம் அடைவாள்.
சந்திரனும், சனியும் கூடி 7மிடத்திலிருந்தால்
இரண்டாம் தாரம் அல்லது இரண்டாவது திருமணம் நடைபெறக்கூடும்.
சந்திரனுக்கு பத்தில் குரு இருந்தால் அமலாயோகம் என்று பெயர்.
இவர் மத்திய வயதில் பாக்கியம் அடைவார்.
நித்திய தர்மத்துடன் கூடியவராக இருப்பார்.
பல தேசங்களில் பிரசித்தி அடைவார்.