முதலில் இடது கட்டை விரலை வலது உள்ளங்கையில் வைத்து
கட்டை விரலை தவிர மற்ற வலது கை விரல்களால் இறுக்கமாக மூடிக்கொள்ள வேண்டும்.
வலது பெருவிரல் இடது கையின் மற்ற நான்கு விரல்களைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
இப்போது சங்கு போன்ற அமைப்பு கைகளில் உருவாகி இருக்கும்.
வலது கையின் பெரு விரலுக்கும்
ஆள்காட்டி விரலுக்கும் இடையே
சங்கின் வாய் போன்ற ஒரு அமைப்பு உருவாகி இருக்கும்.
பலன்கள்:-
தொண்டை சம்மந்தமான நோய்கள் குணமாகும்.
ஜீரணசக்தி அதிகரிக்கும்.
வாயு தொடர்பான நோய்கள் குணமாகும்.
வயிற்றுவலி குடல் நோய்கள் குணமாகும்.
திக்குவாய் தொண்டை நோய்கள் குணமாகும்.
நாளமில்லாச் சுரப்பிகள் அனைத்தும் சிறப்பாக செயல்படும்.
தூக்கமின்மையை போக்கும்.
இம்முத்திரையை 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம்..
வஜ்ராசனம், பத்மாசனம், சுகாசனத்தில் செய்வது சிறப்பு.
வயதானவர்கள், ஆசனநிலையில் அமர முடியாதவர்கள்
நாற்காலியில் அமர்ந்து செய்யலாம்.
தொடர்ந்து 40 நிமிடம் செய்ய முடியவில்லை என்றால்
காலையில்20 நிமிடமும் மாலையில்20 நிமிடமும் செய்யலாம்.