2, 6, 8, 12 – ல் சூரியன், சந்திரன் சேர்க்கை பெற்று, சனி, செவ்வாயின் தொடர்பை பெற்றாலும்,
2- க்குரியவர் நீச்ச அஸ்தமனம் பெற்று 2 லிருந்து செவ்வாய் லக்கினத்திற்கோ சுக்கிரனுக்கோ 5 – ல் ராகுவுடன்
சேர்ந்து, சூரியன், சனி தொடர்பை பெற்றாலும், 2 – க்குரியவர் செவ்வாய், கேது, சூரியன் சேர்க்கை பெற்று
சனியின் தொடர்பை பெற்றாலும் கண் பார்வை கெடலாம்.
இவர்கள் திசாபுத்தி காலத்தில் யாருடைய ஆதரவுமின்றி, குடும்பத்தை விட்டு ஒதுங்க வேண்டிய
சூழ்நிலை வரலாம். விரக்தியின் காரணமாக தற்கொலைக்கு ஆளாவார்.
2 – ல் சூரியன், புதன் சேர்க்கை இருந்து, செவ்வாயின் தொடர்பை பெற்றால்,
மிகுந்த உணர்ச்சி உள்ளவர். கல்வி, வித்தையில் புகழ் பெற்றவர்.
நல்ல தொழில்களில் ஈடுபட்டுத் தனத்தை தேடுவார்.
பெண்கள் விசயத்தில் காதல் வசப்பட்டு மாட்டிக்கொண்டு விழிப்பார்.