2 – ல் குரு சுபர் சேர்க்கை பெற்று இருப்பினும், புதன், சுக்கிரன் சேர்க்கை பெற்று,
பாவர் பார்வை இல்லாமலிருப்பினும், 2 – ல் சுக்கிரன் வர்க்காதிபதியாகி வலுத்தாலும்,
2 – க்குரியவர் கேந்திர திரிகோணங்களிலிருந்தாலும், மேடை பேச்சில் வல்லவர்,
எழுத்து துறையில் புகழ் பெற்றவர். நாவன்மை மிக்கவர். தன் பேச்சால்,
எல்லோரையும் கவர்ந்து இழுக்கும் ஆற்றல் பெற்றவர்.
2 – க்குரியவர், சனியின் தொடர்பு பெற்றிருப்பினும், 2 – ல் சூரியன், சனி இருந்து,
செவ்வாயின் தொடர்பை ஏற்றிருப்பினும், 2 – ல் சுக்கிரன், சூரியன், ராகு இருந்து,
பாவர் தொடர்பை பெற்று இருப்பினும்
2 – ல் பாவர்களுடைய ஆதிக்கம் இருப்பினும் கண்களுக்கு கவசம் அணிவார்.
கண் பார்வையில் கோளாறு ஏற்படும். கண்ணில் ரண சிகிச்சை காணும்.
மேற்படி கிரக தசாபுத்தி காலங்களில் குடும்பத்தில் துக்ககரமான சம்பவங்கள் நடக்கும்