2 அல்லது 10, 11 – ஆம் வீடு சுபர் வீடாகி இதற்கு சுபர் பார்வை சேர்க்கை இருப்பினும்
5, 9, 11 – ஆமிடங்களை குரு பார்த்திருப்பினும்,
2, 9 – க்குரியவருடன் குரு சேர்ந்து இருப்பினும்
இவர்கள் திசாபுத்தி காலத்தில் அக்கிரகங்களின் கிழமைகளில் பணம் வரும்.
2, 5 – க்குரியவர் சேர்க்கை, 6, 8, 12 – லிருப்பின் நோய்த் தொல்லையால் கல்வி தடைபடும்.
கீழ்த்தரமான வார்ததைகளை உபயோகிப்பர்.
அகால போஜனம். நீச்ச வழியில் தான் சம்பாதனை. குடும்ப பொறுப்பு. இவர் தலையில் விழும்.
2 – ல் பாவர், அல்லது 2-ஆம் இடத்தை பாவர் பார்த்தாலும் இவரோடு ராகு, கேது, சனி தொடர்பு பெற்றாலும்,
கவிச்சி பொருட்களில் நாட்டம் அதிகம்.
கடினமான வார்த்தைகளை பேசுவான் வாக்கு தடை உண்டு. கல்வி தடைப்பட்டுவிடும்.
குடும்ப விரோதம் காணும். மாமிசத்தை விரும்பி புசிப்பான்.