2 – இல் ராகு, மாந்தி 2 – க்குரியவர் புதன் சாரம் பெற்று சூரியனுடன் சேர்ந்து, சனியின் தொடர்பை பெற்றால்,
ஒரு கண் பழுதாகும். இல்லற வாழ்க்கை சரிப்படாது. வெறுக்கக்கூடிய வஸ்துக்களை சாப்பிடுவான்.
2 – க்கு அதிபதி புதனாகி,9, 3 – க்குரியவர், கேது தொடர்பால் பெற்றால் லட்சக்கணக்கான ரூபாய்களில் புழக்கம்
ஏற்படும். நவரத்தினங்கள், தங்கம், வெள்ளி போன்றவைகளில் புழக்கம் காணும்.
ஜாதகர் அதனால் சுகம் அடைய முடியாது.
2 – க்குரியவர், 4, 7, 10 – ல் நல்ல பலம் பெற்று சுபச்சந்திரனின் தொடர்பு ஏற்பட்டால்,
வாழ்நாள் முழுவதும் நல்ல போஜனம், தங்கம், வெள்ளி தட்டுகளில் ஆகாரம் உண்பதும்,
உயர்ந்த நிலையில் உள்ளவர்களோடு, சாப்பிடுவதும் உண்டாகும்.