2 – ல், 9, 11 – க்குரியவர் பலம் பெற்றிருப்பினும், 1- க்குரியவர் 2- ஆமிடத்தை, பார்த்து, 1
– க்குரிய வரை குரு, 5, 9 – ஆம் பார்வையால் பார்த்து இருக்க
2 – க்குரியவர், 2, 11 – ல் பாக்கியாதிபதியோடு கூட குறை இல்லாத தனம் உள்ளவன்.
அடுத்தவர்களுடைய தனம் இவர்களிடம் விளையாடும்,
இறப்பு வரையில் தரித்திரம் என்பதை பார்க்காதவன்.
மேற்படி கிரக தசாபுத்தி காலங்களில், எதிர்பாராத தனம் வந்து சேரும்.
லாட்டரி, ரேஸ், பந்தயங்களின் மூலம் பணம் வரும்.
2 – க்குரியவர், ஆட்சி பெற்று சுபரோடு கூடி இருப்பினும்,
சுக்கிரன் 1- க்குரியவர், சேர்க்கை பெற்றாலும், 2 – க்குரியவர் சூரியன் சேர்க்கை பெற்று
சுக்கிரன் ஆட்சி உச்சம் பெற்றாலும் இவர்களின் கண் அழகே தனி.
மீன்விழி, மான்விழி என வர்ணிப்பர். இவர்களின் கண்களும், முகமும்
எல்லோரையும் ஈர்க்கும் வசீகர சக்தி வாய்ந்தது. கலைத்துறையில் பிரகாசிப்பார்.