2 – க்குரியவர், ராகு, 6 – க்குடையவர் தொடர்பு பெற்றாலும் 2, 6, 12 – க்குடையவரின் தொடர்பு பெற்றாலும்,
2 – க்கு 8 – ஆமிடத்தில் உள்ள கிரக தசாபுத்திகள் வந்தாலும், கடன்தொல்லை, குடும்பத்தில் அபகீர்த்தி
உடன்பிறப்பு வகை விரோதம், குடும்பத்தில் தனக்கஷ்டம், முகம், பல் வகையில் நோய் ஏற்பட்டு
அதன் அழகு கெடும்.
2 – மிடத்தை பாவர்கள் பார்க்க, 2 – ல் சனி அல்லது ராகு இருக்க, நாயால் பயம் ஏற்படும்.
2 – ல் 1, 5 – க்குரியவர் சேர்க்கை பெற்று 2 – க்குரியவர் தொடர்பு பெற்று பாவரின் பார்வை பெற்றால்,
கல்வியில் உயர்ந்த நிலையிலிருந்தாலும், அக் கல்வியில் தன விருத்தி இருக்காது.
குடும்பத்தில் அமைதி இல்லாத நிலை, எவ்வளவுதான் சம்பாதித்தாலும் போதாத குறை.
2 – க்குரியவர், 5, 9 – க்குரியவருடன் கூடி இவர்கள் தசாபுத்தி நடக்கும் காலம்
எதிர்பாராத தனம், பரிசுப்பொருட்கள் கிட்டும்.