மிதுன லக்கினத்திற்கு குரு-சனி சேர்க்கை ராஜயோகம் என ‘‘ கவி ’’ கூறுகிறது. ஆனால் அனுபவத்தில் குரு-சனி ‘ பரஸ்பர பார்வை’( அ ) 5,9,3,10 பார்வைகள் மட்டுமே யோகத்தைத் தரும். மிதுன லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சூரி, செவ்வாய், குரு கொடுமைகளை அதிகம் செய்யும் அதிகாரம் பெற்றவர்கள் ஆகிறார்கள். இந்த லக்கினக்காரர்களுக்கு சுக்கிரன்,புதன் சேர்க்கை எங்கு இருப்பினும் நல்ல யோகத்தை விருத்தி செய்கிறார்கள். சந்திரன் மாரகத்தை செய்யான். ஆனால் குரு பகவான் கேந்திராதிபதி தோஷத்தில் பலம் பெற்றவராகி- பாதகாதிபதியானதால், இவர் 1,4,5,7.9.10,11 ஆகிய ஸ்தானங்கள் ஒன்றில் அமர்ந்திருந்தால் ஜாதகர்களின் பாடு படு திண்டாட்டம்தான். இவ்வித அமைப்புப் பெற்ற மிதுன லக்கினக்காரர்களுக்கு வெளி உலகில் மதிப்பும் மரியாதையும் நல்லபடி இருக்கும். ஆனால் உள்ளே ஏராளமான தொல்லைகள் மனைவி, உடல் நலம் புத்திரர்கள், தொழில் பாக்கியம் ஆகிய விஷயங்களில் இடையூறுகளைத் தந்து கொண்டே இருப்பார். இந்தக் குரு பகவான் அதிலும் குரு திசை வந்து விட்டாலோ, வெளி வட்டாரத்தில் உயர்த்திக் கொண்டே போவார். தனிப்பட்ட முறையில் பல பாதகங்களைச் செய்து கொண்டே இருப்பார். இது போல் மிதுன லக்கினகாரர்களுக்கு 7 ஆம் வீட்டில் உள்ள கிரகங்கள் எதுவானாலும் தங்கள் தசாபுத்தி காலங்களில் நன்மையான பலன்களைத் தருவதில்லை. அதிலும் 7-ஆம் வீட்டில் இருக்கும் கிரகம் தனது திசையை ‘மூலம்’ சாரம் பெற்று நடத்தினால் கேது புத்தி வரையிலும் ‘ பூராடம்’ சாரம் பெற்று நடத்தினால்-சுக்கிர புத்தி வரையிலும் ‘உத்திராடம்’ சாரம் பெற்று நடத்தினால் – சூரிய புத்தியில் 4-ல் ஒரு பங்கு வரையிலும் பல தொல்லைகளை நிச்சம் தருகிறது. Category: கோள்களின் கோலாட்டம்By admin@powerathmaFebruary 14, 2021Leave a commentTags: DIVINEPOWER AATHMAA .COMஅதிகாரம்சுக்கிரன்ஜாதகர்தசாபுத்திபுதன் Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு மிதுன லக்கினம். 1NextNext post:இயற்கையும் இறைவனும் 3Related Postsகோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 8October 5, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 7October 4, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 6October 3, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 5October 2, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 4October 1, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 3August 31, 2024