இந்த லக்கினத்திற்கு குரு-செவ்வாய் சேர்க்கை, ராகு, கேதுக்களுடைய
தொடர்பை பெற்று இருப்பின்
இல்லற வாழ்க்கை பாதிக்கிறது. பிரிவினை, தாரதோஷம், வம்ச தோஷம்
மனைவிக்கு அகால மரண தோஷம்,
ஆகிய பலன்களைத் தருகிறது. புதன், குருவுடன் கூடுவது, சம்பந்தப்படுவது,
யோகத்தை கெடுத்துவிடுவதோடு
நல்ல பலன்களையும் விருத்தி செய்வதில்லை. இதே புதன் செவ்வாயுடன்
சம்பந்தப்பட்டால் நன்மையான பலன் நிச்சயம் தருகிறார்.
அவரவர் தசாபுத்திகளின் போது கை கொடுத்து உதவுகிறார்கள்.
சனி உச்சம் பெற்று குருவால் பார்க்கப்பட்டு இருந்தால் மட்டும்
இராஜ யோகத்தை தர காரணமாகிறார். 3-ல் செவ்வாய், யோக பலன்களைத்தருகிறார்கள்.
கொடிய மாரகன் சொல்லப்பட்ட குரு, 3, 5, 12 ஆகிய இடங்களில் அமர்ந்து
ராகு-கேது புதன்-சனி ஆகியோரின் தொடர்களைப் பெற்றிருப்பின்,
constellation illustration.
குரு தனது தசையில் பிற்பகுதியில் யோகப் பலன்களைத் தருகிறார்.
அணியேழுக்குடையனப் பாரு – அவர்
அங்காரகனாக வாட்சியாய் நிற்க
குனிதம் விதி பிசகாது – சென்மன்
குமரிக்கு விதியுண்டு சுமங்கலி – தோழி
ரிஷப லக்கினத்திற்கு 7 – ல் 12 – ல் செவ்வாய் இருந்தால் தோஷம் இல்லை
என இக்கவி மூலம் அறிகிறோம்.