“சிங்க வோரையினிலுத்தவர்க் கிரவி சேய் சுபர்கவி புதன்பாவர் மங்கல குசனும் யோககாரனாய் வரினுமம் மண் மகனாலுக் கங்க மாயுள் ளோனாதலிற்றீமை யாம் பலனீ குவன் வெள்ளி பங்குமாரகாரகமாரகத் தானம் பரிவினுங் கண்ட மாய்ப்பகரே” ( யவன காவியம்) “புந்தியும் பார்கவனும் போற்றற் கரும்பாவி செந்நிறத்த செவ்வாயே செம்மைக் கோள்- அந்நிறத்தாய்யோகமுற்றோர் இப்பலனை யோராதளித்திடுவார் ஆகமதியாரார் புகர் ” ( தாண்டவ மாலை ) “முதலே சிங்கம் புந்தி, புகர், மோதும் பாவர், செய்சுபனாம் ”, “சேர்ந்த சிங்க லக்கினத்தைச் சேர ஜனித்தவர்க்கு ஏந்துசனி சுக்கிரனுமே பாவி – போந்த செவ்வாய் ஏறுமிரவி நல்லன் இன்புகர் செய் கூடியிடில் வீரிய யோகங்களுண்டாம் வேறு ”. ( சந்திர காவியம் ) “யாரப்பா சிங்கத்தில் ஜெனித்த பேர்க்கு பவுமனுமே திரிகோணமேரி நிற்க சீரப்பா செம்பொன்னும் செல்வம் பூதி சிவ சிவா சிக்குமடா சென்மனுக்கு வீரப்பா மற்றயிடந்தனிலே நிற்க வெகுமோசம் வருகுமடா விளையால் துன்பம் ”. ( புலிப்பாணி ) “திரித்தியை கருமணைப்பாரு – அவர் திடமாக யீறிரண்டு தசம் நட்பு கோணம் கரும் பிதிர்வர்க்கமுண்டாம் – சென்மென் கனவானந் தொழிலள்ளோன் நேசனாந்தோழி ”. புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்ற நியதியில் பிறந்த இந்த சிம்ம லக்கினக்காரர்களின் செயல்பாடுகள் தன்மைகள் தனித்தன்மை பொருந்தியதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. Category: கோள்களின் கோலாட்டம்By admin@powerathmaFebruary 20, 2021Leave a commentTags: சந்திர காவியம்சிம்ம லக்கினம்சேய்புகர்புந்திபுலிப்பாணி Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 13NextNext post:பவனமுக்தாசனம்Related Postsநட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 6January 31, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 5January 30, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 4January 29, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 3January 28, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 2January 27, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு. 1January 26, 2026