8 – ல் 4 – க்குடையவர், 3 – க்குடையவர் சூரியன் மூவரும் நிற்க, 4 – க்குடையவர் நீச்சமடைய மார்பு நோயினால் மரணம்.
லக்னாதிபதி, 4 – க்குடையவர் உச்சமடைய, லக்கினாதிபதி 8 – ல் நிற்க, மேக, ரோகத்தால் மரணம்.
குருவுடன் 8 – க்குடையவர் கூடி 6 – ல் நிற்க, சனி பார்க்க, கபம், சுரத்தால் மரணம்.
சுக்கிரனும், லக்கினாதிபதியும் கூடி 8 – ல் நிற்க, 8 – க்குடையவர் 7 – இல் நிற்க மேகநீர் வியாதியால் மரணம்.