6 – க்குரியவர் 11 -இல் லக்கினாதிபதியுடன் சம்பந்தப்பட்டு
அல்லது பார்வை பெற்று அல்லது சாரம் பெற்று இருப்பின்
எதிரி அதிகம் உண்டு. சத்துரு தனம் கிடைக்கும். நோய் இன்றி வாழ்ந்தாலும், மேற்படி தசாபுத்தி காலங்களில்
ஆளை புடம்போட்டு, பல வித கெட்ட பெயர்கள் வாங்கித் தர வாய்ப்பு உண்டு.
10, 6, 12, 2 – இல் சூரியன், செவ்வாய், சனி, ராகு சேர்க்கை பார்வை இருப்பின் ஏவல், பில்லி சூன்யத்தால் பயம் ஏற்படும்.
6, 8, 12 – க்குடையவர்கள் சேர்க்கை பெற்று ஒருவருக்கொருவர் சத்துருவானால்,
சத்துருஸ்தானத்தில் இருப்பினும்,
அவர்களது தசை பூராவும் ராஜயோகத்தை தரும்.
இது அனுபவத்தில் பார்க்கும்போது
மேற்படி அமைப்பு 6, 8, 12 – ல் இருந்தால் மட்டுமே ஏற்படுகிறது..