4 – லில் சூரியன், 4 – க்குரியவர் பலம் பெற்று சுக்கிரனின் தொடர்பை பெற்றால்
நிலம், வீடு, வாகனம் போன்றவைகளின் மூலம் லாபம் தேடுவான்.
30 வயதிற்கு மேல் நல்ல நிலையில் வாழும் தன்மை உண்டு.
3, 6, 8, 12 – இல் சந்திரனிருப்பதும் அல்லது 3, 6, 8, 12 – க்குரியவர் சந்திரனுக்கு 3, 6, 8, 12 லிருந்து,
5, 9 – க்குடையவர், தொடர்பை பெற்றால்
இவர்களின் திசாபுத்திகாலங்களில் எதிர்பாராத தனவிருத்தியும், நிலம், வீடு, வாகன சேர்க்கையும்,
மனைவியால் மனவருத்தமும், கூட்டுத் தொழிலால் ஆபத்துக் காணும்.
4 – லில் சந்திரன், 8 – க்குரியவர் 7 – இல், 4, 7 – க்குரியவர் 9 – இல், 5 – க்குரியவரின் தொடர்பை பெற்றால்,
நிலச்சுவான்தாரர் ஆவான். ஏராளமான நஞ்சை – புஞ்சை நிலங்கள் உண்டு.
வாகன யோகம் கிட்டும். வாழ்க்கையில் பல தவறுகளைச் செய்வான்.