3, 6, 8, 12 – இல் சந்திரன் இருப்பினும் அல்லது 3, 6, 8, 12 – க்குடையவர்,
சந்திரனுக்கு 3, 6, 8, 12 – லிருப்பினும் இவர்கள் திசாபுத்தி காலங்களில்
வாகனம், நிலம், வீடு தனம் சேர்க்கை ஏற்படும்.
4 – க்குரியவர், சந்திரன் 3, 6, 8 லிருப்பின் செல்வம் நிலைக்காது.
4 – ல் சூரியன், 4 – க்குரியவர் உச்சம் பெற்று சுக்கிரன் சேர்க்கை பார்வை பெற்றால்,
30 வயதிற்கு மேல் விசேஷ வாகன யோகம்.
4 – இல் சந்திரன், 7 – இல் 4, 7 – க்குரியவர், 9 – ல் 5 – க்குரியவர்
ஏராளமான நிலம் சொத்து, வாகன யோகம் உண்டு.