குருவும், 4 – க்குடையவரும் கூடி சந்திரனுக்கு 4 – இல் நிற்க, 7, 3 அந்த ராசியாதிபதி
லக்கினத்திற்கு 4 – இல் நிற்க மேற்படி பலன்.
4 – க்குடையவர், குரு ஆகியவர்கள் நின்ற ராசியாதிபதி, பகை அஸ்தமனம், நீச்சம் அடைந்தால் பசு தங்காது பால் கிடைக்காது.
9 – இல், 4 – க்குடையவர், சுக்கிரன் பார்வை பெற்று நிற்க, 9 – க்குடையவர் 4 – ல் மாறி நின்று சுபர் பார்க்க,
இந்திர சுகம் பிறர் மனையில் சென்று இன்பம் அடைவார்.
சனி 4 – இல் நிற்க, 4 – க்குடையவர் சூரியனுடன் கூடி 6 – இல் நிற்க, 8 – க்குடையவர் பார்க்க, சுகமிருந்தும் அனுபவிக்க அறியாதவர்.
பிறரால் நற்சுகம் கிடைத்தாலும் சுகம் அடையத் தெரியாதவர்
அப்படி அனுபவித்தால் மனம் தாங்காது மரணம் அடைவார்.
சுகம் அனுபவிப்பவரைப் பார்த்து பொறமை படுவார்.