12 – க்குடையவரோடு எத்தனை கிரகங்கள் கூடி இருக்கிறதோ அத்தனை வீடுகள் உண்டு. இவர் சுபத்தன்மை பெறவேண்டும்.
சந்திரனுக்கு, 8, 4 – க்குடையவர்களும் சுக்கிரனும் கூடி 4 – இல் நிற்க கூரை வீடு,
4 – ஆமிடத்திற்கு இரு பக்கமும் பாபிகள் நிற்க மேற்படி பலன்.
ஆட்சி பெற்ற சந்திரனோடு 4 – க்குடையவரும் சுக்கிரனும் கூடி நிற்க, குரு பார்க்க சிவந்த பசுவின் பாலை சாப்பிடுவார்.
4 – க்குடையவர் சுபராயிருந்து, 5 – இல் நிற்க
சுக்கிரனோடு 5 – க்குரியவர் கூடி 4 – இல் நிற்க,
பலவிதமான பசு விர்த்தி உண்டு.