4 – இல் 4 – க்கு 6 – க்குரியவர் சாரம் பெற்று பாவருடைய தொடர்பை பெற்றால், தாய்க்கு
மனநோய், நரம்பு தளர்ச்சி, நீர், தோல் சம்பந்தப்பட்ட வியாதி வரும்.
4 – ஆம் பாவாதிபதி, பாதகாதிபசாரம் பெற்று, தாய்க்காரகர் கர்மாதிபதி சாரம் பெற்று,
4 – க்கு, 4 – ஆம் பாவாதிபதி மறைந்தால், பால்ய முதல் சுகமற்றவன்.
தனது உடல் உழைப்பால் மக்களை பேணிக்காப்பான். மக்களால் அபகீர்த்தி உண்டு
பல கர்மாக்களுக்கு உட்படுவார். இவர் வாழ்க்கை சோகம் நிறைந்ததாக இருக்கும்.
4 – ஆம் பாவாதிபதி உச்சம் பெற்றிருந்தால் மாட மாளிகையில் வாழும் அமைப்பும்,
சொகுசான வாகன வசதியும் சேரும். சொத்துக்கள், நிலபுலன்கள் வரும்.
12 – ஆமிடத்தில் உச்சம் பெற்று இருந்தால், மேற்படி சொன்ன வகையில் பாதிபபுகளும்,
பூர்வீக சொத்துக்களும் நாசமடையும். குரு பார்வை கிடைத்திருந்தால்,
பிற்காலத்தில் ஸ்திர சொத்து அவசியம் ஏற்படும்.