4 – இல் பாவர், 4 – க்குரியவர் பாதகாதிபதி சாரம் பெற்று பாவரால் பார்க்கப்பட்டால்,
தாய்க்கும், ஜாதகனுக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும். தாயை
ஈனமான வார்ததைகளை சொல்லி வேதனைப்படுத்துவார்.
அதை துச்சமென நினைத்து தாய் ஜாதகருக்காக கடைசி வரையில் போராடுவாள்.
4 – க்குரியவர் பாதகம் பெற்று, 12 – க்குரியவர், 4 – இல் அமர்ந்து பாதகாதிபதியாலும், 6 – க்குரியவராலும் பார்க்கப்பட்டால்,
இருதயம், மார்பு போன்றவைகளில் நோய் ஏற்பட்டு அறுவை சிகிச்சை பெறுவர்.
மேற்படி கிரக திசாபுத்தி காலங்களில் நடக்கும்.
5, 10 – க்குரியவர் சாரம் பெற்றவரை 5, 9, 10 – க்குடையவர் தொடர்பு பெற்று
மேற்படி கிரக திசையில் 4, 11 – க்குரியவரின் புததியில் நல்ல வேலை செய்கிறது.