4 – க்குரியவர் கேந்திரம் பெற்று சுபரால் பார்த்து லக்கினாதிபதி 8 – லிருக்க, நிலபுலம் உண்டு.
4 – க்குரிய திசையும், 4 – இல் உள்ளவர் திசாபுத்தியிலும் சொந்த வீடுமனை அமையும்.
4 – க்குரியவர் 11 – ல் பாவருடன் சேர, 6 – க்குரியவர் 7 – இல் 4 – க்குரியவரால் பார்க்க,
சந்திரன் 2 – இல் அமர பிறந்தவனின் தாய், பல தொல்லைகளுக்கு ஆளாவாள். அந்தக் குடும்பம்
பெண் தெய்வ சாபத்திற்கு ஆளாகும்
நிரந்தரமான சுகம் கிட்டாது. வரும் மனைவி பெற்ற தந்தை இவர்களால் அரவணைப்பு குறையும்.
தாய், தந்தை வர்க்கத்தில் உள்ளளவர்கள் செயற்கை முறையில் மரணங்களை அடைவர்.
4 – க்குரியவர் சனி சாரம் பெற்று, பாவரின் தொடர்பை பெற்று மேற்படி திசாபுத்தி வரும்போது
தாய்க்கு கண்டாதிபீடை மாற்றாந்தாயின் சுகத்தை பெறுதல், நிலம், வீடு, வாகனம் சேதம், அடிக்கடி இடம்£ற்றம் உண்டு.