3–,8இல் புதன் இருந்து அது உபய ராசியாகி அந்த ராசி நாதன் உபய ராசியிலிருந்தால்
தன் தாயின் வளர்ப்பு கிட்டாது. அன்னியத்தாய் இவளை வளர்ப்பாள்.
இவன் வாழ்க்கை உயர்வாகத்தான் இருக்கும்.
பாசமும், நேசமும் நிறைந்தவன்,
பிறக்கும்போது தாய்ப்பாலை அருந்த முடியாதவன்.
2–4 – க்குரியவர், 6 – க்குரியவர் சேர்ந்து 4 – க்கு 12 – இல், இருந்து
4 – க்கு, 7, 8 – க்குரியவர் சேர்ந்து 4 – க்கு 9 லிருந்தால்
இவன் பிறந்த உடனே தாய் இறப்பாள்.
சிறிது காலத்தில் தந்தையும் இறப்பார்.
இவன் வளர்ப்பு தாய் வர்க்கத்தில் இருக்கும்.
அவ்வர்க்கத்தின் மூலம் பலம் கிட்டும்.
3– 4 – க்குரியவர் நின்ற நவாம்ச அதிபதியின் திசையில் அல்லது
4 – க்குரியவர் திசையில் தந்தைக்கு, தாய்க்கு நோய்த் தொல்லை,
வாகன விபத்துக்கள் ஏற்படும்.