3 – இல் பாவர் இருக்க பாவர் பார்க்க, பிறந்த ஜாதகங்கள்
எவ்வகையினாலும் தன் காரியத்தை சாதித்துக் கொள்ளுவான்.
பிறரின் பொருளை அபகரிப்பான். தவறான காரியங்களில் ஈடுபடுவான்.
தாய்க்கும், தந்தைக்கும் ஆபத்துக்களைத் தருபவன்.
3 – க்குரியவர், 9 – க்குரியவருடன் சேர்ந்து பாவரால் பார்க்கப்பட்டு இருந்தால்,
தாய், தந்தையை துன்புறுத்துவான். உடன் பிறப்புக்களுக்கு ஆகாதவன்.
காம இச்சையை எப்படியாவது தீர்த்துக் கொள்ள ஆசைப்படுவான்.
3 – க்குரியவர், 8 – க்குரியவர், 7 – க்குரியவர் சேர்ந்து
, 6 – க்குரியவர் 3 – ஆமிடத்தைப் பார்த்தால்
இளம் வயதில் இவன் செய்யாத சேஷ்டையகள் கிடையாது.
பெண்கள் விஷயத்தில் படு குஷியானவன்.
ஓரின புணர்ச்சியில் ஆசை உள்ளவன்.
வாழ்க்கையில் மத்திம வயதிற்குப் பின் திருந்தி வாழ்வான்.