3 – க்குரியவர் பலம் பெற்று 3 – இல், ராகு 8, 11 – க்குரியவரின் தொடர்பை பெற்று சுபரால் பார்க்கக்பபட்டால்,
இவர்களின் தசாபுத்தி அந்திர காலங்களில் எடுத்த காரியம் வெற்றி
திடீர் தனப்பிராப்தி, ரேஸ் பந்தயம், சூதாட்டங்களில் லாட்டரி போன்றவகைளில் ஆதாயம் கிட்டும்.
3 – இல் கேது அமர்ந்து லக்கினாதிபதி, குரு 9 – ஆம்பாவாதிபதி தொடர்பு கிடைத்தால்,
அன்னிய சகாயத்தால் முன்னேற்றமடைவர்.
உடன் பிறப்புக்களால் நன்மை இல்லை.
மாமனார் வகை ஆதாயம் மனைவியால் பாக்கியம்.
3 – ல் குரு இருப்பின் இவன் வாழ்க்கை எப்படியாவது சிறப்பான நிலை பெறும்.
பல கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளாகி, பலரின் ஏசல், போட்டி, பொறாமை, கேலிக்கு ஆளாகி
வாழ்க்கையில் பாரட்டுக்களை பெற முடியும்.