3 – ஆம் பாவதிபதி எந்த கிரகமோ, அந்த கிரகத்திற்கு பலம் பெற்ற கிரகம்
நவாம்சப்படி மூத்தவர் எண்ணிக்கை ஆண் கிரகம் ஆனால் ஆண்,
பெண் கிரகங்களால் பெண், இதில் அலிக்கிரகங்களை தள்ளிவிட வேண்டும் எண்ணிக்கையில் மட்டும்.
3 – க்குரியவர் உச்சம் பெற்று, லக்கினாதிபதி, ராகு, குருவின் தொடர்பை பெற்று,
3 – ஆமிடத்தை பாவர்கள் தீண்டினால் பல மாதர்களின் தொடர்பு கிடைத்துக்கொண்டே இருக்கும்.
இளம் வயது உள்ள பெண்களின் தொடர்பு அடிக்கடி கிடைக்கப்பெற்று இன்பமாக காலத்தை கழிப்பான்.
இவ்வமைப்பு பெற்றவனால் மனைவிக்கு சுகம் கிடைக்காது.
3 – இல், 5, 6 – க்குரியவர் தன் சுய சாரம் பெற்று சுப ஆதிபத்தியம் பெற்ற சுபரால் பார்க்கப்பட்டால்
இவர்களின் தசாபுத்தி காலங்களில் நல்ல யோகத்தைத் தரும்.
அன்னியர்களின் தனம் வரும்.
எதிர்பாராத வகையில் முன்னேற்றம் கிட்டும்.