பலம் பெற்ற 3 – ஆம் பாவாதிபதியோ, செவ்வாயோ, பலம் பெற்று மேசம், கடகம், துலாம், மகரம் போன்ற
ராசிகளிலிருந்தால் அந்த ராசியை முதலாக கொண்டு,
நவாம்சத்தில் அவர் உள்ள வீடுவரை எண்ணி வரும் எண்ணிக்கையை சொல்ல வேண்டும்.
மேற்படி கிரகம், மிதுனம், கன்னி, தனுசு, மீனம் போன்ற ராசியிலிருந்தால்,
அதற்கு 7 – ஆம் ராசியை முதலாக வைத்து, நவாம்சத்தில் எந்த ராசியில் உள்ளாரோ
அது வரை எண்ணி உடன் பிறப்புக்களின் எண்ணிக்கையை சொல்ல வேண்டும்.
மேற்படி கிரகம் ரிசபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் போன்ற ராசிகளிலிருந்தால்,
அந்த ராசிக்கு 9 – ஆம் ராசியை முதலாக வைத்து, நவாம்சையில் எந்த ராசியில் அக்கிரகம் உள்ளதோ
அதுவரை எண்ணி சொல்ல வேண்டும்.
இதில் காரகன் செவ்வாயினுடைய அமைப்பை வைத்து
சகோதர உற்பத்தியையும், பாவாதிபதியை வைத்து இருப்பையும் சொல்ல வேண்டும்.