3 – ல் பாவர் பலம் பெற்று 3 – க்குரியவர் பாதகாதிபதி சேர்க்கை பெற்று 3 – மிடத்தை பார்த்தால்
உடன்பிறப்பு, பிறந்து இறக்கும், 1 ஆண் சகோதரம் தங்கும்.
3 – க்குரியவர் ராகு சாரம் பெற்று மறைந்து 3 – க்கு, 6 – க்குரியவருடன் சேர்க்கை பெற்று,
செவ்வாய்க்கு 12 – க்குரிய சாரம் பெற்று பலம்இழந்து
பாவரால் பார்க்கப்பட்டால், 3 – க்குரியவர் திசையில் அல்லது
அவர் பெற்ற சாரநாதன் திசையில் உடன் பிறப்பில் ஒருவர் தற்கொலை,
குடும்பம் பிரிந்துவிடல் போன்ற பலன் உண்டு.
3 – க்குரியவர், 11 – ல் ஸ்திர ராசி ஸ்திரீகிரகத்துடன் சம்பந்தப்பட்டு
பலத்து இருப்பின் மூத்த சகோதரம் அதிகம் உண்டு.