சுக்கிரனும், 2, 3 – குடையவர்களும், மூவரும் திரிகோணமடைய
5 – க்குரியவர் பார்க்க சாஸ்திரங்களில் வல்லவராயிருந்தும் நரி ஊளையிட்டால் பயப்படுவார்.
3, 5, 6 – க்குடையவர்கள் பலமடைந்து 12 – ல் நிற்க,
ராஜசபையிலும் பந்துக்கள் சபையிலும், பயமும், வெட்கமும் உடையவர்.
7 – ல் ராகு நிற்க, 7 – க்குடையவர் கேந்திரமடைய
தன் மனைவியோடு மதன நூல் விதிப்படி லீலைகள் செய்து வாழ்வார்.