49) 11 – ல் குரு இருந்து,
சுக்கிரன், புதன், சந்திரன், செவ்வாய், கேது, லக்கினாதிபதி, 6 பேர்களையும், பார்க்க,
தனம், கல்வியில் சிறப்புடன் இருப்பர்.
காவிய நூல் படைப்பார்.
பல மொழிகளில் தேர்ச்சி கிடைக்கும்.
ஞானநூல் ஆசிரியர் ஆவார்.
50) லக்கினத்தில் ராகு நிற்க,
7, 6 – க்குடையவர் கூடி 4 – ல் நிற்க
பல நூல்களை கற்று புகழ் பெற்றவர்களோடு இருந்து
பல வினோத வித்தையில்
கீர்த்தியும் – புகழும் பெறுவர்.