லக்கினாதிபதி சூரியனுடன் கூடி 5 – ல் நிற்க, லக்கினத்தை குரு பார்க்க கணிதத்தில் வல்லவர்.
சுக்கிரனும், குருவும் ஒருவரை ஒருவர் பார்க்க மேற்படி பலன்.
4 – ல் குரு நின்று சனியைப் பார்க்க, புதன் லக்கினத்தில் நிற்க, 2 – ல் சூரியன், சுக்கிரன் கூட வாகடநூல் பண்டிதர்
லக்கினத்திற்கு 4 – லிலும், சுக்கிரனுக்கு திரிகோணத்திலும் சனி நிற்க மேற்படி பலன்.
7, 6 – க்குடையவர்கள் கூடி 4 – ல் நிற்க லக்கினத்தில் ராகு நிற்க விநோத வித்தையில் கீர்த்தியுள்ளவர்.