2 – ல் புதன் நிற்க, 2 – க்குடையவர், லக்கினத்தில் நிற்க,
4 – ல் சந்திரன் நிற்க, குரு 10 – ல்நிற்க,
அவருக்கு 3 – ல் சுக்கிரன் நிற்க,
யோக்கியவான். வாக்குவளம், யூகம் கல்வி உடையவர்.
லக்கினாதிபதி லக்கினத்தில் நிற்க,
2 – ல் புதன் நிற்க, 4 – ல் சந்திரன் நிற்க,
குரு திரிகோணமடைய
லக்கினத்தைப் பார்க்க
சாஸ்திர ஆராய்ச்சியாளர் ஆவார்
2 – ல் குரு நிற்க, 2 – க்குடையவரை குரு பார்க்க,
புதன், குருவுக்கு 11 – ல் நிற்க,
சுக்கிரன் லக்கினத்தில் நிற்க,
யோக்கியம், பாக்கியம், கல்வி உண்மை உடையவர்.