மீனம்.
1 முதல் 10 பாகைக்குள் — நரதிரேக்காணம் –
பாத்திரம், முத்துக்கள், ரத்தினங்கள், சங்கு இவற்றுடன் கலந்த
பொருள்களால் சம்பந்தம் பெற்ற கையை உடையவனும்,
அலங்காரங்களுடன் கூடியவனுமான,
மனையாளின் ஆபரணத்திற்காக கடல் தாண்டி செல்பவனும்.ஆவான்
குரு நாயகன்
ஸ்திரீ கிரகம்
பலம் கழுத்துவரை.
10 முதல் 20 பாகைக்குள் — ஸ்திரீதிரேக்காணம்–
செண்பகத்திற் – கொப்பான முகமுள்ளவனும்,
சேடிகள், வேலையாட்கள், இவர்களுடன் கூடியவளுமான
ஸ்திரீயாக மிகவும் உயர்ந்தவளும்,
கொடி இவைகளுடன் கூடின தெப்பத்தை உடையவனும்
கடலில் இருந்து கரையை அடையும் அமைப்பு
சந்திரன் நாயகன்,
ஆண் கிரகம்
பலம் – தொப்புள் வரை.
20 முதல் 30 பாகைக்குள் — சர்ப்ப நரதிரேக்காணம்–
பாம்பினால் சுற்றப்பட்ட சரீரமுடையவனும்,
துணிகள் இல்லாதவனும்,
திருடர்கள், நெருப்பு இவற்றால் கலங்கின மனதுள்ளவன்
காட்டில், ஒரு குழியில் கதறும் நிலை –
செவ்வாய் நாயகன் –
அலி கிரகம்
பலம் – பாதம் வரை.