புதன், சனி சேர்க்கையானது, துலாம், மகரம், கும்பம், மீனம், மிதுனம், கடகம், போன்ற இடங்களில் இருப்பின், உறுதியாக யோகபலன்களைத் தராமலிருக்காது. இவர்கள் தசா – புத்திகாலங்களில், சொத்து சேர்க்கை, கெளரவம், பட்டம், பதவி, உண்டு. துலாம் லக்கினத்திற்கு, ராகு, கேது, செவ்வாய் போன்றவர்கள் அதிக பாதிப்பைத் தருவதில்லை, செவ்வாய் சமத்துவமான கிரகமாக செயல்படுகிறார். ராகு, கேதுவோடு புதன், சனி சேர்க்கை பெற்றால் ராகு, கேது தசாபுத்தி காலங்கள் நன்மையே செய்கிறது. லக்கினாதிபதியான சுக்கிரனோட சேர்க்கை பெற்ற ராகு, கேது முக்கால் பங்கு யோக பலனையும், கால் பங்கு அவயோகத்தையும் தருகிறார்கள். பூர்ண சுபக்கிரகம் எனச் சொல்லப்படும் குரு, துலாம் லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு , பூர்ணபாவியாகி பலவிதபாதிப்பு, நோய், கடன், சத்துரு உபாதைகளைத் தர காரணமாகிறார். இவர், தனுசு, கும்பம், மீனம், மிதுனம், கன்னி ராசிகளில் தனித்தோ, அல்லது வேறு எந்த ஒரு கிரகசேர்க்கை பெற்றோ இருப்பினும் குரு தனது தசா புத்திகாலங்களில் நல்ல யோகத்தைத் தந்து அடுத்துவரும் தசையில் ஒன்றும் செயல்பட முடியாத அளவு செய்துவிடுகிறார். Category: கோள்களின் கோலாட்டம்By admin@powerathmaFebruary 28, 2021Leave a commentTags: கடகம்கும்பம்துலாம்மகரம்மிதுனம்மீனம் Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:கோள்களின் கோலாட்டம் 1 -1.7 12 லக்னங்களில் ஆய்வு துலா லக்கினம் 2NextNext post:ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 16Related Postsகோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 18March 20, 2025கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 17February 20, 2025கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 16February 19, 2025கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 15February 18, 2025கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 14February 17, 2025கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 13February 16, 2025